உலக செய்திகள்

பாரிஸ் நகரில் மேற்கோள்ளப்பட்ட ஐ.எஸ் தாக்குதலில் மூவர் பலி…

பாரிஸ் நகரின் பகுதியில் மர்ம நபர் ஒருவர், திடீரென அரேபிய மொழியில் சத்தமிட்டவாறே கத்தியால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பின்னர் குறித்த நபர் வீட்டுக்குள் சென்ற நிலையில் சிறிது நேரம் கழித்து வெளியில் வந்துள்ளார். அப்போது வெளியில் இருந்த பொலிஸார் சம்மந்தப்பட்ட நபரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். சம்பவத்தை தொடர்ந்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இதற்கான ஆதாரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Related posts

சூரியனை அடைந்தது நாசா விண்கலம்

wpengine

இந்தியாவின் பரிசாக ருவாண்டாவுக்கு 200 பசுக்கள்…

wpengine

இரு பத்திரிகையாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

wpengine