கேளிக்கை

பிக்பாஸ் பிரபலத்துடன் மீண்டும் நெருக்கமாகும் ஓவியா….

“பிக்பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மிகவும் பிரபலமாகி இருப்பவர் ஓவியா. இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருக்கிறது.

நிகழ்ச்சியில் ஓவியாவுக்கும் அவருடன் கலந்து கொண்ட ஆரவ்-க்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. தன் காதலை ஆரவ் ஏற்காததால், மன அழுத்தம் ஏற்பட்டு நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறினார். இதனால், ஓவியாவின் ரசிகர்கள் ஆரவை திட்டித் தீர்த்தனர்.

சில நாட்கள் மனம் உடைந்த நிலையில் இருந்த ஓவியா பின்னர் சகஜ நிலைக்கு திரும்பினார். அதன் பிறகு ஓவியாவும் ஆரவும் சாதாரணமாக பேசிக் கொண்டனர். அவரைப்பற்றி கருத்து தெரிவித்த ஆரவ், “இந்த உலகில் ஏதாவது ஒரு வகையில் நாம் நடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஓவியா அவராகவே இருக்கிறார். அதனால்தான் அவரை எனக்கும் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது” என்றார்.

இந்த நிலையில் ஓவியா நேற்று தனது 27-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ஆரவ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பிறந்த நாள் வாழ்த்து’ தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஓவியா, ‘நன்றி டியர் ஆரவ்’ என்று கூறியுள்ளார். இதைப் பார்த்த ஒரு ரசிகர், ‘அப்போ நாங்கதான் முட்டாளா? எப்படியோ நல்லா இருந்தா சந்தோ‌ஷம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஓவியா, ‘ரொம்ப சந்தோ‌ஷம்’ என்று பதில் அளித்திருக்கிறார். ‘இதன் மூலம் ஓவியாவும் ஆரவும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் மீண்டும் நெருங்கிவிட்டார்கள். பிரியவில்லை என்பதை உறுதி செய்து விட்டார்கள்’ என்று ஓவியாவின் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

சூர்யா படத்தில் பிரபல பின்னணி பாடகர்கள்…

wpengine

அமலாபால் இரண்டாவது திருமணம்…

wpengine

‘Farrah Kader’ பட வாய்ப்புக்காக புது யுக்தியில்… (PHOTOS)

wpengine