உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கைகள் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு..

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம் மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த விசாரணை அறிக்கைகள் உள்ளிட்ட 34 அறிக்கைகள் இன்று(23) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1.௦௦ மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளது.

அதன்போது பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதுடன், அதன் பிரதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

மேலும், பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பான விவாதத்திற்கான நாள் குறித்து, பிற்பகல் 2.30 மணியளவில் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ள விசேட சந்திப்பின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#reeshma

Related posts

யாழில் பிறப்பு வீதம் அதிகரிப்பு..

wpengine

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு…

wpengine

போர்ட் சிட்டி நிர்மாணம் தாமதித்தால் இலங்கைக்கே நஷ்டம் – மஹிந்த

wpengine