உள்நாட்டு செய்திகள்

பியர் வகைகளின் விலை குறைப்பில் மாற்றம் இல்லை…

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நிலை வாசிப்பின் ஐந்தாம் நாள் இன்று(15). நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போது பொருட்களின் விலை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதில், பியர் வகைகளுக்கான வரியை குறைக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் பியருக்கான வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பியருக்கான வரி குறைக்கப்படுவதனை பௌத்த மாநாயக்க தேரர்கள் முதல் பல்வேறு தரப்பினர் எதிர்த்து வருகின்ற நிலையில், பியருக்கான வரி குறைப்பு குறித்த தீர்மானத்தில் மாற்றமில்லை என நிதி அமைச்சர் மீளவும் வலியுறுத்தியுள்ளார்.

மதுபானத்தில் அடங்கியுள்ள அல்கஹஹோலின் அளவினை அடிப்படையாகக் கொண்டு வரி அறவீடு செய்வதானது சர்வதேச நடைமுறை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

#rizmira

Related posts

சில மாவட்டங்களுக்கு இன்று வெப்பம் அதிகரிக்கும் சாத்தியம்…

wpengine

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை…

wpengine

நாட்டுக்கு பாதகமான பொருத்தமற்ற எந்தவொரு உடன்படிக்கையிலும் கையொப்பம் இடப்படமாட்டாது – ஜனாதிபதி..

wpengine