உள்நாட்டு செய்திகள்

பிரதமரால் ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு..

வரவு செலவு முடியும் வரை இவ்வருடத்தில் பயணிக்கும் வெளிநாட்டு பயணங்களை குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நேற்று(06) கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டிருப்பதாவது, இக்காலப் பகுதியில் அத்தியாவசியத் தேவை நிமித்தம் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள இருப்பின் அது குறித்து மூன்று கிழமைகளுக்கு முன்னர் தனக்கு தெரிவிக்கப்படல் வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

ஜே.வி.பி யின் மக்கள் பேரணி இன்று(01)…

wpengine

உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அமைச்சரவை அனுமதி

wpengine

மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது – அமைச்சர் ரஞ்சித்

wpengine