உள்நாட்டு செய்திகள்

பிரதமருடன் இந்திய விமானப்படைத் தளபதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய விமானப்படைத் தளபதி எயார் ஷீவ் மார்ஷல் ராக்கேஸ் குமார்சிங்க பாதவுரியா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை வந்துள்ளார்.

இந்த விஜயத்தில் அவர் பிரதமரைச் சந்தித்திருக்கின்றார். இதன்போது இலங்கைக்கு தொடர்ந்து பாதுகாப்பு உதவிகளை வழங்கப்போவதாக இந்திய விமானப்படைத் தளபதி உறுதியளித்துள்ளார்.

இலங்கையும் இந்தியாவும் நீண்ட கால பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன. இது சமுத்திரவியல் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் போன்ற பல்துறை சார்ந்ததாக விஸ்தாரம் பெற்றுள்ளது. இந்த ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தலாம் என இந்திய விமானப் படைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் நிறைவு திகதி அறிவிப்பு

wpengine

கெசல்கமுவ ஒயாவில் தேயிலை கழிவுகள்.. – விசாரணைகள் ஆரம்பம்..

wpengine

அவசர பயன்பாட்டிற்கு சீனாவின் தடுப்பூசி

wpengine