உள்நாட்டு செய்திகள்

பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக எம்.பீ.எம்.அஷ்ரப்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் அலுவலகத்திற்கு இலங்கை நிர்வாக சேவையின் 05 விசேட தர மேலதிக செயலாளர் பதவிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 03 பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றன.

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான பசுமை காலநிலை நிதியத்தின் முகாமைத்துவ நிபுணராகப் பணிபுரிகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி எம்.பீ.எம். அஷ்ரப், குறித்த பதவி வெற்றிடமாகவுள்ள மேலதிக செயலாளர் பதவிக்கு நிமிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

கொழும்பில் இருந்து யாழ் சென்ற ரயில் தீப்பற்றியது…

wpengine

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா!

wpengine

4வது ஒருநாள் போட்டியிலும் கோட்டை விட்டது இலங்கை அணி..

wpengine