Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமர் ரணில் பதவி விலகல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளார்.

புதிய ஜனதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு புதிய காபந்து அரசாங்கமொன்றை அமைப்பதற்கு இடமளிக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மேலும் இன்றைய தினம் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ புதிய பிரதமர் தலைமையிலான 15 அமைச்சர்களைக் கொண்ட ஒரு காபந்து அரசாங்கத்தை அமைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எவன்கார்ட் வழக்கு எதிர்வரும் 09ம் திகதிக்கு ஒத்திவைப்பு…

wpengine

எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்வனவுக்கு டொலர் வழங்க பிரதமர் இணக்கம்

wpengine

மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க CID முன்னிலையில்..

wpengine