உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார் மஹிந்த..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உட்பட அவரது உறவினரான அர்ஜுன் அலோசியஸையும் சிறை தள்ள வேண்டும் என்றும் மஹிந்தானந்த அலுத்கமகே கோரிக்கை விடுத்தார்.

கொழும்பு – பொறளையிலுள்ள என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் இன்று(04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்புபட்டிருப்பதை அது தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிய முன்னரே தனது கட்சி இந்த இரகசியங்களை வெளியிட்டிருந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

(rizmira)

Related posts

இதுவரை 1,927 பேர் கைது

wpengine

SLMC – ACMC இணைந்து பொதுச்சின்னத்தில் களமிறங்க முடிவு

wpengine

ஜனாதிபதி குறித்து பொய்யான தகவல்களை வழங்கிய பிரபல ஜோதிடருக்கு எதிராக விசாரணை…

wpengine