உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப்  விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் ஹைதராபாத் நகரில், எதிர்வரும், 19ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை, உலக தகவல் தொழில்நுட்ப காங்கிரசின் 22 ஆவது மாநாடு நடைபெறவுள்ளது.

குறித்த இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். எனினும், இந்தியப் பிரதமர் செயலகம் இன்னமும், அவர் பங்கேற்பதை உறுதிப்படுத்தவில்லை.

உலக தகவல் தொழில்நுட்ப காங்கிரசின் மாநாடு முதல் முறையாக இந்தியாவில் நடக்கவுள்ளது. குறித்த மாநாட்டில் 30இற்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

#rishma

Related posts

நீதித்துறை திருத்தச் சட்டமூலம் விவகாரம் – மனுவினை நிராகரிக்கக் கோரி இடையீட்டு மனு…

wpengine

நிலஅளவையாளர் சங்கமும் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை.

wpengine

விமானங்களது தாமதத்தினால் கட்டுநாயக்கவில் சற்றுப் பதற்ற நிலை..

wpengine