உலக செய்திகள்

பிரதமர் வெடி விபத்திலிருந்து காயமின்றி உயிர் தப்பினார்…

பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்தல்லா வெடி விபத்தில் இருந்து உயிர்த்தப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் கழிவுப்பொருட்கள் ஆலை ஒன்றை தொடங்கிவைப்பதற்காக நேற்று(13) சென்ற பிரதமர், காசா வீதியில் பயணம் செய்துள்ளார்.

வாகன அணிவகுப்புடன் சென்ற ரமி ஹம்தல்லாவின் வாகனம் குறிப்பிட்ட ஒரு இடத்தை கடந்த போது பலத்த வெடிச் சத்தம் கேட்டதுடன் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பான காட்சிகள் அந்நாட்டு தொலைக்காட்சிகளில் உடனடியாக வெளியாகின. அதில் பிரதமர் ரமி ஹம்தல்லா காயமின்றி உயிர் தப்பியது தெரிந்தது.

இந்த வெடிவிபத்தின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில், திட்டமிட்டபடி நிகழ்ச்சியில் பிரதமர் ரமி ஹம்தல்லா கலந்துகொண்டார்.

Related posts

கொரோனா : இரண்டாவது இடத்தில் பிரேசில்

wpengine

தென்கொரிய விமான விபத்தில் இதுவரை 62 பேரின் உடல்கள் மீட்பு

Azeem Kilabdeen

அரச பரிசுப்பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டு – இம்ரானிற்கும் மனைவிக்கும் 14 வருட சிறை..!

wpengine