கேளிக்கை

பிரபல ஹாலிவுட் நடிகர் வெர்னே உலகை விட்டும் பிரிந்தார்…

2 அடி உயரம் மட்டுமே உள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் வெர்னே ட்ராயர், 1994-ம் ஆண்டு முதல் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். எண்ணற்ற வெற்றி படங்களில் நடித்த இவருக்கு ஹாரி பாட்டர், ஆஸ்டின் பவர்ஸ் போன்ற திரைப்படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்று தந்தது.

இம்மாத ஆரம்பத்தில் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உயிரிழந்துவிட்டதாக அவரது செய்தி தொடர்பாளர், ட்விட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், வெர்னே இன்று காலமானார் என பெரும் சோகத்தோடும், நம்பமுடியாத கனத்த இதயத்தோடும் எழுதுகிறேன். வெர்னே மிகவும் அக்கறையானவர். எப்பொழுதும் அனைவரையும் புன்னகை நிறைந்த முகத்துடன் சந்தோசமாக சிரித்து பார்க்க வேண்டும் என நினைப்பவர்” என பதிவிட்டிருந்தார்.

Related posts

கவர்ச்சி நாயகி சன்னியின் மற்றுமோர் புதிய காணொளி…

wpengine

காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா…

wpengine

Leggings அணிந்து, விமானத்தில் பயணிக்க தடை….

wpengine