கேளிக்கை

பிரம்மாண்ட படத்திலிருந்து சிம்புவை விலக வைத்த நயன்…

(FASTGOSSIP|COLOMBO) பிரம்மாண்ட படமொன்றிலிருந்து நயன்தாரா வால் சிம்பு விலகிய தகவல் கசிந்திருக்கிறது. சுமார் ரூ 800 கோடியிலிருந்து ஆயிரம் கோடி செலவில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார் மணிரத்னம்.

இதில் விஜய், விக்ரம், கார்த்தி, சிம்பு, ஜெயம் ரவி, சத்யராஜ், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.

இதே படத்தில் முக்கிய வேடத்தில் நயன்தாராவையும் நடிக்க வைக்க மணிரத்னம் முயன்றார். அப்போது ‘சிம்பு இப்படத்தில் நடித்தால் நான் நடிக்க மாட்டேன்’ என்று நயன்தாரா, இயக்குனரிடம் கண்டிஷன் போட்டாராம்.

இந்த தகவல் மணிரத்னம் தரப்பிலிருந்து சிம்புவுக்கு தெரியவர, படத்திலிருந்து நான் விலகிக்கொள்கிறேன் என்று சிம்பு விலகி விட்டாராம். பாகுபலி பாணியில் பொன்னியின் செல்வன் சரித்திர படம் 2 பாகங்களாக உருவாகவிருக்கிறதாம்.

ஒரு காலத்தில் நயன்தாரா, சிம்பு தவிர்க்க முடியாத ஜோடியாக இருந்தது. நிஜத்திலும் காதல் ஜோடியாக வலம் வந்தவர்களுக்குள் திடீரென்று இருவரும் பிரிந்து விட்டார்கள். பிரிந்த பிறகும் கூட இருவரும், ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தனர்.

அதன்பிறகு இருவருக்குமான விரிசல் நிரந்தரமானது. இதற்கிடையில் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாயினர். இந்த ஆண்டு இறுதியில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

சாவித்ரியாக மாறும் கீர்த்தி சுரேஷ்..

wpengine

சுஷாந்த் சிங் மரணம் – CBI விசாரணை

wpengine

நடிகர்கள் மவுனப் போராட்டம் – புறக்கணித்த முன்னணி நடிகைகள்… (photos)

wpengine