உலக செய்திகள்

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜினாமா…

பிரிட்டனில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் மைக்கேல் ஃபாலன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறாக நடந்துகொள்வதாக ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரசா மே உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக்கேல் ஃபாலன் 2002-ம் ஆண்டு வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினியின் முழங்காலை தொட்டு தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், மைக்கேல் ஃபாலன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தற்போது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக பதவி விலகும் முதல் எம்.பி. மைக்கேல் ஃபாலன் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

அல் ஜஸீரா உட்பட 21 இணைய தளங்கள் எகிப்து அரசால் முடக்கம்..

wpengine

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப்பை நியமிக்க முடிவு – தேர்தல் முடிவுகளை சவாலுக்கு உட்படுத்த இம்ரான்கான் முடிவு

wpengine

முஸ்லிம்கள் சற்று வித்தியாசமானவர்கள்தான்..!

wpengine