உலக செய்திகள்

பிரித்தானிய அரசியின் கணவரும் இளவரசருமான பிலிப் அரச பணிகளில் இருந்து ஓய்வு..

பிரித்தானிய அரசியின் கணவரும் இளவரசருமான பிலிப், இந்த ஆண்டு கோடை காலத்துக்கு பிறகு அரச பணிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

தனது கணவரின் முடிவை அரசியார் முழுமையாக ஆதரித்துள்ளார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

எனினும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 96 வயதை எட்டும் அவர், ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு பொது நிகழ்ச்சிகளுக்கான அழைப்புகள் எதையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

ஆனால் எலிசபெத் அரசியார் தொடர்ந்து தனது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளில் முழுமையாக பங்கேற்பார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை மேலும் அறிவித்துள்ளது.

(rizmira) 

Related posts

பாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 400ஆக உயர்வு

wpengine

ஏமனில் தொடங்கிய சில நிமிடங்களில் முறிந்துபோன போர் நிறுத்த ஒப்பந்தம்…

wpengine

‘ஆசியன்’ தொடர் இடம்பெறும் தாய்லாந்தில் 06 வெடிப்பு சம்பவங்கள்

wpengine