ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரித்தானிய இளவரசர் ஹரி மீண்டும் Datting வலையில்..

முன்னாள் காதலியும், நடிகையுமான கிரேஸிடா போனஸின் காதல் முறிவுக்கு பின்னர் தனிமையில் இருந்த பிரித்தானிய இளவரசர் ஹரி தற்போது, மீண்டும் காதலில் விழுந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இளவரசர் ஹரியும், நடிகையுமான கிரேஸிடாவும் தீவிரமாக காதலித்து வந்தனர், பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொண்ட இந்த ஜோடியின் காதல் உறவு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தோல்வியில் முடிந்தது.

அதன் பின்னர் தனிமையில் இருந்த ஹரி, தற்போது மீண்டும் காதலில் இணைந்துவிட்டார்.

பிரபல பாப் ஸ்டாரான Ellie Goulding – வுடன் ரகசியமாக டேட்டிங் செய்து வருகிறார், Berkshire உள்ள CoworthPark- இல் நடைபெற்ற Audi Polo challenge நிகழ்வில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

இதில் இரவு நேரம் நடைபெற்ற விருந்தில், ஒருவரையொருவர் வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர், இதனை அந்த விருந்துக்கு வந்தவர்கள் நோட்டமிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்ட இவர்கள், விருந்து முழுவதையும் ஒன்றாக கழித்துள்ளனர்.

இந்த நிகழ்வின் மூலம் இளவரசர் ஹரி, மீண்டும் காதல் வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஐ.தே.கட்சியின் உறுப்பினர்கள் தம் வாய்களை பாதுகாத்துக்கொள்ளவும் – மஹிந்த [VIDEO]

wpengine

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவி பொன்சேகாவிற்கு…

wpengine

தந்தையினை பணயம் வைத்தே மெஸ்ஸி தலைமையிலான அணியினை எதிர்கொண்டேன்…

wpengine