உலக செய்திகள்

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்…

(FASTNEWS|PHILIPPINES) பிலிப்பைன்சில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்கு பிலிப்பைன்சின் சாரங்கனி மாகாணத்தில் அலபேல் நகரில் இருந்து 10 கிமீ வடகிழக்கே கடலுக்கடியில் 96 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகாக பதிவாகியிருந்ததாகவும், பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் பூகம்பவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் இலேசாக குலுங்கின. பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

அலபேல் நகருக்கு அருகில் உள்ள பல நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பப்புவா நியூகினியா மற்றும் இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

wpengine

தென்கொரியா சென்றுள்ள வடகொரியாவின் மகளிர் வீராங்கனைகள்…

wpengine

இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விடுதலை

wpengine