உள்நாட்டு செய்திகள்

பிலியந்தலை – மஹரகம வீதி தற்காலிகமாக மூடப்படுகின்றது

பிலியந்தலை – மஹரகம வீதி தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த இந்த வீதியில் திருத்தப்பணிகள் இடம்பெறுவதன் காரணமாகவே மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்றைய தினத்திலிருந்து   எதிர்வரும் 23 ஆம் திகதி வரை பிலியந்தலை – மஹரகம வீதியானது இரவு 9 மணி தொடக்கம் காலை 5 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இதன்போது மாற்று வீதிகளான கொழும்பு – ஹொரண பிரதான வீதியின் கட்டுவாவல சந்தியிலிருந்து மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை வீதி ஊடாக மஹரகம நகர் நோக்கி பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

wpengine

சு.கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பதவி மஹிந்த அமரவீரருக்கு

wpengine

மே தினக் கூட்டம் : இன்று தீர்மானம்

wpengine