உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் பிணை மனு எதிர்வரும் 28ம் திகதி பரீசிலனைக்கு

சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு கோரிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனால் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு தொடர்பான விசாரணை இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்திரகாந்தன் ஆஜர்படுத்தப்பட்டார்.

இது தொடர்பான விசாரணையினை மேற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி. சந்திராணி விஸ்வலிங்கம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ம் திகதி வரை பிணை மனு மீதான விசாரணையை ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.

 

Related posts

சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி திறப்பு…

wpengine

இரு பேரூந்துகள் நேருக்குநேர் மோதியதில் 6பேரின் நிலை கவலைக்கிடம்

wpengine

பொசன் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

wpengine