உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் விளக்கமறியல் எதிர்வரும்  11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.தியாகேஸ்வரன் முன்னிலையில் இன்று இவர்களை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4  பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர். இந்தக்; கொலைச்; சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது…

wpengine

ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் ஈடுபட்டாலும் பரீட்சைகளுக்கு பாதிப்பு இல்லை…

wpengine

அவுஸ்ரேலிய குடியுரிமையை இரத்து செய்ய குமார் குணரத்னம் விருப்பம்..

wpengine