உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் மே 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று(28) இவர்களை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இவர்களுக்கான விளக்கமறியலை நீடித்துள்ளார்.

த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசன்துரை சந்திரகாந்தன் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

(rizmira)

Related posts

நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி…

wpengine

அரச வங்கியொன்றில் தீப்பரவல்…

wpengine

மின் கட்டணத்தை 32% ஆல் அதிகரிக்க யோசனை..!

wpengine