உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்கமறியல்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி வரை (10.2..2016) அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இவ்வாறு உத்தரவிட்டார்.

கடந்த 2005.12.25 ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று பிள்ளையான் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை நேற்று 26ம் திகதி கிழக்கு மாகாண சபை அமர்வில் நீதிமன்ற உத்திரவின் பேரில் பிள்ளையான் அதிஉச்ச பாதுகாப்புக்கு மத்தியில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்து தபால் சேவைக்கான ரயில் சேவைகள் இரத்து…

wpengine

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

Azeem Kilabdeen

மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine