உள்நாட்டு செய்திகள்

புகைத்தலுக்கு எதிரான கொடி குறித்த செயற்திட்டம் இன்று முதல்..

சர்வதேச புகைத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொடி செயற்திட்டத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கப்பட்டது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த( இந்த செயற்திட்டம் நேற்று(30) ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது.

‘தீய பழக்கங்களை ஒழித்து நிரந்தர மகிழ்ச்சியை அனுபவிப்போம் – ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த கொடி செயற்திட்டம் இன்று முதல் ஜூன் மாதம் 30ம் திகதி வரையான ஒரு மாத காலத்திற்கு நாடு முழுவதும் செயற்படுத்தப்படவுள்ளது.

கொடிகளை அணிவிப்பதன் மூலமாக பெற்றுக்கொள்ளப்படும் நிதி சமுர்த்தி பயனாளிகளின் குடும்ப நலனோம்புகை செயற்பாடுகளுக்காகவும், அவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்தல், புலமைப்பரிசில் செயற்திட்டங்கள், விசேட தேவைகளை உடையோருக்கு வசதிகளை வழங்குதல், பாடசாலை உபகரணங்களை வழங்குதல் போன்ற சேவைகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட ‘எமது பாதையில் சமூக நலனோம்பு தடங்கள்’ எனும் அறிக்கையும் இதன்போது அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

(rizmira)

Related posts

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்…

wpengine

முரத்தட்டுவே ஆனந்த தேரருக்கு கொலை மிரட்டல்

wpengine

45,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை..!

wpengine