உள்நாட்டு செய்திகள்

புகையிரதங்களில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைக்கு தடை…

சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட இடம் வழங்கப்படாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த திணைக்களத்தின் பொது முகாமையாளர் எஸ்.எம் அபேவிக்கிரம தெரிவிக்கையில்;

புகையிரதங்களில் வியாபார நோக்கில் விற்பனைகள் மேற்கொள்வதால் பயணிகள் பல சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றனர். புகையிரத பயணிகளின் கோரிக்கைக்கு அமையவே குறித்த நடவடிக்கைக்கு ரயில்வே திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.

இவர்கள் விற்பனை செய்யும் உணவுப்பொருட்கள் தொடர்பிலும் பயணிகள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். அதேபோன்று விசேடமாக இடம்பெறும் திருட்டுக்களுக்கும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாகவும் பயணிகள் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அது குறித்து விசேட அறிவித்தல் ஒன்றினையும் ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவித்தல்.

#####

Related posts

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான வர்த்தமானி

wpengine

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து

wpengine

ரணிலுக்கு ஆதரவு வழங்கினால் TNA எதிர்கட்சிப் பதவியினை இழக்க நேரிடும்..

wpengine