உள்நாட்டு செய்திகள்

புகையிரத கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அறிக்கை போக்குவரத்து அமைச்சிடம் கையளிப்பு…

புகையிரத கட்டண அதிகரிப்பு தொடர்பிலான குழுவின் அறிக்கை போக்குவரத்து அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

பயணிகள் கட்டணத்தை 15% இனால் அதிகரிப்பது சம்பந்தமான யோசனை அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள தகவல்கள் தெரவிக்கின்றன.

பயணிகள் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை மாத்திரம் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பொருட்கள், பொதிகள் விநியோக சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு மேற்கொள்வதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அந்த அறிக்கை அமைச்சரவைக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்றுக் கொள்ளப்பட உள்ளது.

அமைச்சரவை அனுமதி பெற்ற பின்னர் புகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமாக வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Rizmira

Related posts

அரிசி மற்றும் மரக்கறி விலைகளில் வீழ்ச்சி

wpengine

மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

wpengine

இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை

wpengine