உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புட்டின் அரசின் அதிரடி உத்தரவு: வெளியேறிய ரஷ்ய சுற்றுலா பிரயாணிகள்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த  ரஷ்யர்கள்,  விலாதிமிர்  புட்டின் தலைமையிலான  அந்நாட்டு அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய,   இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று ( 5) பிற்பகல் 12.50 மணிக்கு நாட்டிலிருந்த இறுதிக் கட்ட ரஷ்ய சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்கவிலிருந்து ரஷ்யாவின் மொஸ்கோ நோக்கி பயணித்தனர்.

ரஷ்யாவின் ‘ஏரோபுளோட் ‘ விமானம் ஒன்றை இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி  உருவாகியுள்ள நிலைமையை அடுத்தே  ரஷ்ய சுற்றுலா பயணிகள் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், இலங்கைக்கு சுற்றுலா வர எதிர்ப்பார்த்திருந்த  சுமார் நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகளை இலங்கை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக சுற்றுலாத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

இலங்கையில், உள்நாட்டு விமான நிலையமொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி

wpengine

2019ம் கல்வியாண்டில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தால் பிள்ளை பாடசாலையில் இருந்து நீக்கம்…

wpengine

கப்பலில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் பலி

wpengine