உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் ஐ.தே.கட்சி இன்று(21) தீர்மானம்..

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று(21) மாலை நடைபெறவுள்ள விசேட செயற்குழு கூட்டத்தில் ‘தேசிய ஜனநாயக முன்னணி’ என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி குறித்த யோசனை, முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

குறித்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ளதாக பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றைய மத்திய செயற்குழு கூட்டத்தின் போது, தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

கடந்த 17ம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற ‘நீதியின் குரல்’ பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேசிய ஜனநாயக முன்னணி என்ற புதிய கூட்டணி தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டதோடு, இந்த கூட்டணியில், ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக்க ஹெல உறுமய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

46 இலங்கையர்களை நாடுக்கடத்திய அவுஸ்திரேலியா!

wpengine

புதிய அலுவலக ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

wpengine

27ம் திகதி முதல் இலங்கை விமான சேவை நேர அட்டவணையில் மாற்றம்..

wpengine