உள்நாட்டு செய்திகள்

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஜனாதிபதி தலையிடக் கூடாது..

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையீடு செய்யக் கூடாது என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனமொன்றை கொண்டு வருவதனால் நாட்டுக்குள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நூலக கேட்போர் கூடத்தில்‘மாற்றம் சுகமா’என்ற தொனிப் பொருளில் நேற்று(05) இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மிகவும் குறுகிய காலத்தில் வெறுக்கப்பட்ட அரசாங்கம் இதுவேயாகும் என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டில் நலிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு புதிய அரசியல் சாசனம் வழியமைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 11 சிறுவர்கள் உயிரிழப்பு…

wpengine

பாரிய மோசடி மற்றும் ஊழல்களை விசாரணை ஆணைக்குழு மஹிந்தவுக்கு அழைப்பு

wpengine

அனைத்து பரீட்சைகளும் குறிப்பிட்ட திகதியில் இடம்பெறும் – பரீட்சைத் திணைக்களம்…

wpengine