விளையாட்டு

புதிய சிக்கலில் பிரபல கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி வரி ஏய்ப்பு புகாரில் எதிர்வரும் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

கால்பந்து களத்தில் கலக்கும் மெஸ்ஸி, விளம்பர உலகிலும் கொடிகட்டி பறந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2007-2009ம் ஆண்டு வரை அவர் வருமான வரியை சரியாக செலுத்தவில்லை என்று ஸ்பெயினில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் ரூ.31.46 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு பார்சிலோனாவில் உள்ள கேடாலோனியா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் மெஸ்ஸி விசாரணைக்காக எதிர்வரும் யூன் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது.

wpengine

இலங்கை தொடரை கைப்பற்றியதன் மூலம் கனவு நனவாகியுள்ளது – மிஸ்பா

wpengine

நிக் போத்தாஸ் இடமிருந்து இலங்கை அணியினருக்கு விசேட அறிவுறுத்தல்..

wpengine