உள்நாட்டு செய்திகள்

புதிய விமானப்படைத் தளபதி நியமனத்தில் குழப்பம்

புதிய விமானப்படைத் தளபதியை நியமிப்பது தொடர்பில் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விமானப்படையின் இரண்டாம் நிலைத் தளபதியாக கடமையாற்றி வரும் அதிகாரிக்கு எதிராக நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விமானப்படை உத்தியோகத்தர் ஒருவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விமானப்படைத் தளபதியாக நியமிக்குமாறு இரண்டு அதிகாரிகளின் பெயர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாரியளவில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் ககன் புலத்சிங்களவின் பெயரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் விமானப்படைத் தளபதியை நியமப்பதில் அதிகாரிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். விமானப்படைத் தளபதியாக கடமையாற்றி வந்த எயார் சீப் மார்ஸல் கோலித குணதிலகவிற்கு பதவி உயர் வழங்கப்பட்டுள்ளதனால் அந்த வெற்றிடத்திற்கு விரைவில் ஒர் அதிகாரியை நியமிக்க வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் கோலித குணதிலக விமானப்படை தளபதி பதவியை மேற்பார்வை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

2018 முதல் சாரதிப் பத்திரம் வழங்க புதிய முறை..

wpengine

ஷவ்வால் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை

wpengine

நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

wpengine