Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புத்தளத்தில் கொரோனாவிற்கு இலக்கான நபர் குணமடைந்தார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தளம் நகரில் கொரோனா தொற்றுக்கு இலக்கான முதலாவது நபர் குணமடைந்துள்ளார்.

இந்தோனேசியாவில் இருந்து வருகை தந்த குறித்த நபர், மார்ச் மாதம் 16ஆம் திகதி புத்தளத்திற்கு வந்த நிலையில் 14 நாட்கள் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார்.

மார்ச் மாதம் 28 திகதி சுகவீனம் காரணமாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் , மேலதிக பரிசோதனைக்காக அன்றைய தினமே குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இதன்போது, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர், கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே அவர் பூரணமாக குணமடைந்து நேற்று வெள்ளிக்கிழமை (10) வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

Related posts

திரையரங்குகளில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை

wpengine

அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜர்.

wpengine

கட்சி மறுசீரமைக்கப்படுதல் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்..

wpengine