உள்நாட்டு செய்திகள்

புத்தளத்தில் SLMC யின் 30 வது தேசிய மாநாடு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

– கரீம் எ. மிஸ்காத் –

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 30 வது தேசிய மாநாடு எதிர்வரும் 2022/11/ 07 ஆம் திகதி புத்தளம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான முன்னோடிக் கலந்துரையாடல் அல்ஹாஜ் றவூப் ஹஸீர் அவர்களின் வழிகாட்டலில், புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், நகர சபை உறுப்பினருமான ஏ.என்.எம்.ஜவ்பர் மரைக்கார் அவர்களின் தலைமையில் 2022/10/31 ஆம் திகதி நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர் பீட உறுப்பினர்களான, வடமேல் மாகாண சபை முன்னால் உறுப்பினர் ஏ.எச்.எம்.நியாஸ், பாரூக் பதீன் ஆசிரியர் ஏஎச்.பைரூஸ், எம். லறி காஸிம், ஏ.எம். நஜாத் ஆசிரியர், எம்.ஏ.ஹாதி முன்னால் புத்தளம் நகர சபை உறுப்பினர்கள், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எப். முஜீபா, ஏ.எம்.எம்.அஸ்லம், எஸ்.ஆர்.எம்.பதுர்தீன் மற்றும் முன்னால் வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இம்மாநாடு சிறப்பாக நடைபெற முன்னேற்பாடுகளாக சில பொறுப்புக்கள் வழங்கப்பட்டதோடு, மாநாட்டுக்கான அழைப்பிதழ்களும் வழங்கப்பட்டதாக அதி உயர் பீட உறுப்பினரான பாரூக் பதீன் ஆசிரியர் தெரிவித்தார்.

Related posts

பிரதியமைச்சர் ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு…

wpengine

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சபாநாயகரின் தீர்மானம் இன்று(21)..

wpengine

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையம் வைத்தியசாலையாக மாற்றம்

wpengine