Top Story 2உள்நாட்டு செய்திகள்

புத்தாண்டு காலப்பகுதியில் 80 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  புது வருடப் பிறப்புடன் இலங்கை முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு செயற்பாடுகளின்போது ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக காயமடைந்த சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 30 பேர் வாகன விபத்துக்கள் காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பட்டாசு தொடர்பான விபத்து ஒன்றில் காயமடைந்த ஒருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புது வருடப் பிறப்பின்போது பல்வேறு செயற்பாடுகளின்போது திடீர் விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, இத்தகைய விபத்துக்களைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஒவ்வொரு திடீர் விபத்தையும் தவிர்க்க முடியும் என சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்துகின்றனர். பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பாக அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இத்தகைய விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Related posts

பஸ்ஸில் ஏறச் சென்ற பெண்ணை மறித்து கடுமையாக தாக்கிய பொலிஸார்..!

wpengine

சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இன்று

wpengine

பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்காக 222 ஓட்டங்களை வழங்கியது இலங்கை அணி..

wpengine