உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

புனித அல் அக்ஸாவினை குறிவைத்து இஸ்ரேலியரின் தாக்குதல்

ஜெருசலமில் உள்ள அல் அக்ஸா மசூதி வாளாகத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைப்பெற்றதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

அல் அக்ஸா மசூதி முஸ்லிம்கள் கட்டுபாட்டில் உள்ளது. சமீபகாலங்களில் அங்கு வருகை தரும் யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருவதுடன் அண்மை காலமாக அங்கு அடிக்கடி மோதல்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய காவல்துறை மீது கற்களையும் பட்டாசுகளையும் வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேலிய காவல்துறை அவர்கள் மீது தடியடி நடத்தியதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் இதுவரை காயமடைந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

(riz)

 

Related posts

மொட்டுவின் ஆதிக்கம் இல்லாமல் சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவ வேண்டும்: சந்திரிகா

wpengine

வற் வரியில் விரைவில் திருத்தம்..

wpengine

2019ம் கல்வியாண்டுக்கான தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமில்லை..

wpengine