உள்நாட்டு செய்திகள்

பூனாவ பகுதியில் விமானப் படை பேரூந்தும் – இ.போ.ச பேரூந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

ஏ9 வீதி பூனாவ பகுதியில் இன்று காலை விமானப் படைக்கு சொந்தமான பேரூந்தும் – இ.போ.ச பேரூந்தும் நேருக்கு நேர் மோதி தடம் புரண்டதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மதவாச்சி, பூனாவ, பூஒயா பகுதியில் ஏ9 வீதியில் பயணித்த இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி வீதியை விட்டு விலகி தடம் புரண்டதில் 15 பேர் காயமடைந்த நிலையில் மதவாச்சி, வவுனியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து அனுராதபுரம் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், அனுராதபுரத்தில் இருந்து வவுனியாவிற்கு வந்த விமானப் படைக்கு சொந்தமான பேருந்தும் மோதியதாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மதவாச்சிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

a9r_accident_001

 

a9r_accident_002

Related posts

சிறுமி துஷ்பிரயோகம் செய்த சம்பவம் – தென் மாகாண சபை உறுப்பினர் கைது…

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine

68 ஆவது மாநாடு ஆரம்பம்

wpengine