Top Story 3உள்நாட்டு செய்திகள்

பெரியநீலாவனையில் பாதசாரி மீது மோதிய கார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெரியநீலாவனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவனை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற கார் ஒன்று, பாதசாரி ஒருவரை இன்று அதிகாலை மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபரை பொலிஸார் கல்முனை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், சடலம் கல்முனை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து பெரியநீலாவனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

wpengine

க.பொ.சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீளாய்வு பெறுபேறு வெளியீடு..

wpengine

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தொழில் பயிற்சி…

wpengine