உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான இடங்களில் சீரான வானிலை…

நாட்டின் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வட மாகாணத்திலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மேலும் பொத்துவில் பிரதேசத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் மற்றும் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம்

wpengine

சமூகங்கள் மீதான தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது…

wpengine

இலங்கை மருத்துவ சபைக்கு GMOA இனது உறுப்பினர்கள் நால்வர் தெரிவு..

wpengine