உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

பிரதியமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..

wpengine

புதிய பிரதமருக்கு பாராளுமன்றில் இருக்கையினை ஒதுக்க நடவடிக்கை…

wpengine

உரங்களை அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் இரத்து

wpengine