உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சிறியளவில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறியளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய கடற்பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

மடகஸ்காரில் பிரபல முஸ்லிம் வர்த்தகர் படுகொலை

wpengine

வெளிநாட்டு கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை

wpengine

கொழும்பு – பதுளை புகையிரத சேவை பாதிப்பு…

wpengine