உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை…

நாட்டின் ஹம்பாந்தோட்டை , மாத்தறை, பதுளை , மற்றும் இரத்திரபுரி மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் 40 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தில் காற்றுவீசக்கூடும் எனவும் வடபகுதியில் காலை மற்றும் இரவுவேளைகளில் குளிரான காலநிலை நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், காலைவேளைகளில் நாட்டின் சில பகுதிகளில் பனிமூட்டமாக காணப்படும் என்று திணைக்களம் இன்று(24) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

பல மாவட்டங்களில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும்..!

wpengine

பல்கலை மாணவரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு விசேட விசாரணை குழு நியமனம்

Azeem Kilabdeen

ரஞ்சித் டி சொய்சாவின் வெற்றிடத்திற்கு வருண

wpengine