உலக செய்திகள்விசேட செய்தி

பெல்ஜியம் ரயில் நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல்..

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்செல்ஸ் நகரின் லா கிராண்ட் பிளேஸ் ரயில் நிலையத்தில் மனித வெடி குண்டுத் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள முயற்சித்த பயங்கரவாதியை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

குறித்த இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி, குண்டு வெடிப்பு நிகழ்த்துவதற்காக பெல்ட் அணிந்திருந்தான் எனவும், குண்டை வெடிக்க செய்த போது ‛அல்லாஹூ அக்பர்’ என கூறியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதியிடமிருந்த “பெல்ட் குண்டு” ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் குறித்த இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

(rizmira)

Related posts

பாணந்துறை கடலில் நீராடச் சென்ற இருவர் பலி, இருவர் மாயம்…

wpengine

எதிர்ப்புகளுக்கும் மத்தியில் 5வது முறையாக அணுகுண்டு பரிசோதனை செய்தது வடகொரியா.

wpengine

சவூதி அரேபியாவின் அசமந்தப்போக்கிற்கு இந்தோனேஷியா கண்டனம்

wpengine