கேளிக்கை

பேபிக்காக திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற சமந்தா

(FASTGOSSIP|COLOMBO) – தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, திருப்பதிக்கு பாத யாத்திரை சென்று சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் ‘ஓ பேபி’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படம் வரும் ஜூலை 5ம் திகதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், நடிகை சமந்தா தன்னுடைய தோழியும் நடிகையுமான ரம்யாவுடன் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதற்கு முன் சீமராஜா படம் வெளியாகும் முன்பு இதே போல் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரியா பவானிக்கு அடித்தது அதிர்ஷ்டம் – கார்த்தியை தொடர்ந்து விஜய்…

wpengine

TV நிகழ்ச்சி தொகுப்புகளில் இருந்து DD விடை பெற்றார்..

wpengine

வரவு செலவுத் திட்டம் வாசிக்கையில் தூங்கி வழிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள் தான்.. (PHOTOS)

wpengine