உள்நாட்டு செய்திகள்

பேராதனை பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் தொடர்பில் 9 மாணவர்கள் விளக்கமறியலில்…

கடந்த 15 ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்கள் இருவர் மர்மான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, 9 மாணவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் அவர்கள் நேற்று(23) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சம்பவத்தில் காயமடைந்த, குறித்த மாணவர்கள் பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள காணொளி ஒன்று தொடர்பிலும் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

மாஸ் மீடியாவினது ஊடகப்படிகள் ஐந்து நாள் வானொலிச்சேவை

wpengine

அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை…

wpengine

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் முஸம்மிலுக்கு பிணை.

wpengine