உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் கைது…

பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை புரிந்த 2ஆம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.

குறித்த முதலாம் ஆண்டு மாணவர்கள் மெகொட – களுகமுவ பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்கு கொண்டுச் செல்லப்பட்டு பகிடிவதை புரியப்பட்டுள்ளதாக பேராதனை காவல் நிலையத்தில் நேற்று(19) இரவு முறையிடப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், பகிடிவதை புரிந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேரையும் இன்று(20) அதிகாலை 2.15 அளவில் கைது செய்தனர்.

இதனிடையே, பகிடிவதைக்கு உள்ளான முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் தற்போது பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பத்தரமுல்லை பகுதி நான்கு மாடி கட்டிடத்தில் தீ

wpengine

திங்கள் முதல் 33 ரயில்கள் சேவையில்

wpengine

வடக்கில் இரு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

wpengine