உள்நாட்டு செய்திகள்

பேரூந்து விபத்தில் சுமார் 06 பேர் காயம்..- சாரதி கைது

நுரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா டன்சினன் பகுதியில் இருந்து அதிக வேகத்துடன் நுவரெலியா நகரத்தை நோக்கி சென்ற தனியார் பேரூந்து ஒன்று நுவரெலியா கம்பளை பிரதான வீதியில் டொப்பாஸ்ட் மண்மேடு பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 06 பேர் காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இந்த சம்பவம் இன்று(01) காலை 07.40 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் காரணமாக தனியார் பேரூந்து சாரதி கைது செய்யபட்டுள்ளதோடு அவர் இன்று நுவரெலிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

 

(மலையக நிருபர் சதீஸ்)

Related posts

‘கல்யாணி பொன் நுழைவு’ இன்று முதல் மக்கள் பாவனைக்கு திறக்கப்படும்

wpengine

ரத்கம வர்த்தகர்கள் கொலை – 17 பேர் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

நியூசிலாந்து அணி 223 ஓட்டங்களுடன் சுருண்டது…

wpengine