Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை – பிரசன்ன ரணதுங்க..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் முரண்பாடு இருப்பதாக சிலர் காட்டிக்கொடுக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

ரணில் விக்ரமசிங்கவின் அனுபவத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் உன்னிப்பாக ஆராய்ந்த பின்னரே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளித்ததாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது அமுல்படுத்தும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் இந்நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருமென மக்கள் பலமாக நம்புவதாகவும் திரு.பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டார்.

Related posts

வைரஸ் நோய் பரவும் அபாயம்

wpengine

கட்டுகஸ்தோட்டை வன்முறையில் ஊடகவியலாளர் ஒருவர் கைது…

wpengine

‘சூப்பர் ஓவர்’ விதிமுறையில் மாற்றம் (புதிய விதிமுறை உள்ளே)

wpengine