உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்காக இங்கிலாந்து சென்ற இரு இலங்கையர்கள் மாயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பின்னர் இலங்கை தடகள வீரரும் ஒரு உயர் அதிகாரியும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அவர்கள் காணாமல் போனது குறித்து இலங்கை அணி நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதுடன், பர்மிங்காம் நகர பொலிசார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக அனைத்து இலங்கை விளையாட்டு வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் 180 நாள் விசா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine

அமெரிக்காவில் இருந்து ஜனாதிபதிக்கு அழைப்பு வராமல், இருக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம்..!

wpengine

சட்ட விரோதமான முறையில் 10,917,496 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இலங்கையர் கைது…

wpengine