உள்நாட்டு செய்திகள்

பொரள்ளை பிரதேசத்தில் சில வீடுகளில் தீ விபத்து

(FASTNEWS|COLOMBO) – பொரள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காதர்னானவத்தை பிரதேசத்தில் இன்று(21) அதிகாலை திடீர் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

141வது பிரிவில் தற்காலிக 04 வீடுகளில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீயினால் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், தீ ஏற்பட்டதற்கான காரணம இதுவரை கண்டறியப்படவில்லை.

தீ விபத்து தொடர்பில் பொரள்ளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

சைட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி மாவட்ட மருத்துவமனைகளுக்கு முன்னால் சத்தியாகிரக போராட்டம்..

wpengine

சட்டமா அதிபர் அழைப்பு

wpengine

முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே CID இல் ஆஜர்

wpengine