உள்நாட்டு செய்திகள்

பொருளாதாரக் குழு இன்னமும் இரத்து செய்யப்படவில்லை…

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் குழு இன்னமும் இரத்து செய்யப்படவில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“… பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார முகாமைத்துவ குழு இன்னும் இரத்தாகவில்லை. இந்த பொருளாதார முகாமைத்துவ குழு இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காரணத்தினால் இந்த விடயம் பற்றி எனக்கு தெரியும். இந்த பொருளாதாரக் குழுவினை இரத்து செய்வது குறித்த அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது..”

 

Rishma

Related posts

தவணை பரீட்சை பெறுபேறுகளை விடுமுறைக்கு முன்னர் வழங்க வலியுறுத்தல்…

wpengine

நவீன வசதிகளுடன் கூடிய 1500 வீடுகள்அடங்கிய வீட்டுத்திட்டமொன்றை ஊடகவியலாளர்களுக்கு வழங்க அரசு முடிவு

wpengine

சிறுவன் ஹம்தியின் அகற்றப்பட்ட கிட்னி சிறுவர் மருத்துவமனை குளிரூட்டியில் பாதுகாப்பாக இருக்கிறது – சுகாதார அமைச்சர் பரபரப்பு தகவல்..!

wpengine