உள்நாட்டு செய்திகள்

பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வட மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர் என வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

2020ம் ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் வட மாகாணத்தில் 485 மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் 2021 ஆம் ஆண்டில் பாடசாலையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 105 ஆகக் குறைந்துள்ளதாகவும், ஆனால் 2022 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கில் 519 பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறி சென்றுள்ளதாகவும் வடமாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் வேலைகளை இழந்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் மாகாணத்தை விட்டு வெளியேறி கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு வேலை தேடிச் செல்வதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில்

wpengine

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு சட்டத்தரணி சாலிய பீரிஸ் பரிந்துரைப்பு

wpengine

கோட்டாவுக்கு அழுத்தம் கொடுத்து வெளியேற்றிய தொழிற் சங்கத்தினர் தற்போது போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் – மஹிந்தானந்த

News Editor